தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் மக்களிடம் உரையாற்றிய போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை 1,000 வழங்கியதை அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் இருந்து காப்பி அடித்ததாக கூறுவது பச்சைப் பொய் என்றும், தாங்கள் அறிவித்த பிறகு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை உளவுத்துறையின் மூலம் அறிந்து முதல்வர்தான் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளார்.