மக்களின் குறைகளை கேட்காத அதிகாரிகளை மூங்கில் குச்சியால் அடியுங்கள் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் மீன்வளம், கால்நடை, பால்பண்ணை ஆகியவற்றின் அமைச்சர் கிரிராஜ் சிங். இவர் ஒரு வேளாண் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பொதுமக்களிடம் அடிக்கடி புகார்களை பெறுகிறோம். நான் அவர்களிடம் சொல்கிறேன். எதற்காக சிறிய விஷயங்களுக்கு என்னிடம் வருகிறீர்கள். எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கிராம நிர்வாகிகள், எஸ்.டி.எம்., பி.டி.ஓக்கள் இவை அனைத்தும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன.
#WATCH | If someone (any government official) doesn't listen to your grievances, hit them with a bamboo stick. Neither we ask them to do any illegitimate job, nor will we tolerate illegitimate 'nanga nritya' by any official: Union Minister Giriraj Singh in Begusarai, Bihar pic.twitter.com/Wxc6TlHiYC
— ANI (@ANI) March 6, 2021
இந்த துறையில் உள்ள அதிகாரிகள் நீங்கள் கூறும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மூங்கில் குச்சியை எடுத்து அவர்களின் தலையில் வேகமாக அடியுங்கள். அது கூட வேலை செய்யாவிட்டால் பிறகு என்னிடம் வாருங்கள் என்று அவர் கூறினார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நடந்த தேர்தல்களில் பல முறை தோல்வியுற்றதால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்