இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரின் மீம்ஸ்-க்கு தரமான கருத்து தெரிவித்த வாஷிங்டன் சுந்தரின் பதில் வைரலாகி வருகின்றது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் போது இந்திய அணியின் வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து சிறப்பாக ஆடியுள்ளார்.இதில் ரிஷப் பண்ட் சதமடித்து அதன்பின் அவுட்டாகி உள்ளார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களை எடுத்து இறுதிவரை நின்றும் அவரால் சதம் அடிக்க முடியவில்லை. இதனை அடுத்து வாஷிங்டன் சுந்தரின் தந்தை அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த நிலையில், பேட்ஸ்மேன்கள் இறுதி வரை ஆட்டமிழந்தது குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
இதனையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், சுந்தரின் தந்தையை பற்றி ஒரு மீம்ஸ் பதிவிட்டுள்ளார். அந்த மீம்-க்கு வாஷிங்டன் சுந்தர் “நன்றி, எனது தந்தை அடுத்த முறை அவர்களை சந்திக்கும் போது பிரியாணி மற்றும் அல்வா கொடுத்து கவனித்துக் கொள்வார் ” என்று நக்கலாக தனது கமெண்டை தெரிவித்துள்ளார். மேலும் வாஷிங்டன் சுந்தர் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.