மகா சிவராத்திரி தினத்தன்று, ராமநாதசுவாமி கோவிலில் பகல், இரவாக நடை திறக்கப்பட்டிருக்கும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர் .
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. விழாவின் 5வது நாளான நேற்று சுவாமியும் ,அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியானது நடந்தது. 6வது நாளான இன்று இரவு 8 மணியளவில் சுவாமியும், அம்பாளும் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ,திருவீதி உலா வரும் நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா சிவராத்திரி தினத்தில் வருகின்ற 11ம் தேதி வியாழக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு வெள்ளி தேரோட்டதில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு , சுவாமியும், அம்பாளும் காட்சியளிப்பர் .அன்று விடியற்காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை 12ஆம் தேதி மதியம் 1 மணி வரை கோவில் நடையானது திறக்கப்பட்டிருக்கும், இவ்வாறு இரவு ,பகலாக கோவில்நடை திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.