கவர்னர் மூலமாக அரசுக்கு பா.ஜனதாவினர் நெருக்கடி கொடுக்கின்றனர் என்று அமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் அரசின் பெரும்பான்மையை இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில் நீருபித்துக் காட்ட வேண்டுமென்று கர்நாடக ஆளுநர் வஜூபாய் கெடு விதித்துள்ளார். இது குறித்து கர்நாடக மாநில அமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் ,
முதலவர் குமாரசாமி மதியம் 1.30 மணிக்குள் அரசின் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டுமென்று கவர்னர் வஜூபாய் உத்தரவிட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முன்பாக எல்லா எம்.எல்.ஏ.க்களும் தங்களது கருத்துகளை கூற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மதியத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். கவர்னர் மூலம் அரசுக்கு பா.ஜனதாவினர் நெருக்கடி கொடுக்கின்றனர் என்று அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.