மகனின் சம்பளத்தில் இனி மனைவி மற்றும் பிள்ளைகளை தவிர பெற்றோர்களுக்கும் உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி முதன்மை நீதிமன்றத்தில் கணவன் தனக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கி வரும் நிதி உதவியே உயர்த்தி வழங்க வேண்டும் என்று பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் கணவர் மாதம் ஐம்பதாயிரம் சம்பாதிப்பதாகவும் தனக்கும், இரண்டரை வயதில் குழந்தைக்கும் மாத பராமரிப்புக்கு செலவாக 10,000 வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். இந்த தொகையை எனக்கு போதுமானதாக இல்லை எனவும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் அவரது கணவரோ 37 ஆயிரம் சம்பாதிப்பதாகவும், அவரது பெற்றோரை கவனித்துக் கொள்ள பணம் செலவழிப்பதாகவும் அவர் கூறினார். பெற்றோரைப் போலவே மனைவி குழந்தை மீதும் கவனம் செலுத்த வேண்டியது கணவனின் கடமை என்றும், மனைவிக்கு வழங்க வேண்டிய நிதி உதவி உயர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அந்த நபர் தனது சம்பளத்தை 6 பகுதிகளாக பிரித்து இரண்டு பகுதி தனக்கும் மற்றும் இரண்டு பகுதியை மனைவி மற்றும் குழந்தைகள், அடுத்த இரண்டு பகுதியை தாய் மற்றும் தந்தைக்கு வழங்க வேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு மாதமும் மனைவி 12500 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.