சட்டசபையின் மாண்புகளை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது என்று செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவரான முக.ஸ்டாலின் உயர்மின் கோபுரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துக் கொண்டு இருக்கும் போது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டார்.
அப்போது செந்தில் பாலாஜி எழுந்து நின்று கைகளை நீட்டி பேச முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பாகிய துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் , அவையின் மாண்பை செந்தில் பாலாஜி மீறியதாக குற்றம் சாட்டினார்.இதற்க்கு சபாநாயகர் அவை மாண்புகளை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது என்று செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்தார்.