மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தி வர உள்ளதால் மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி முன்பாக மோடி அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 முதல் 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 17 சதவீத அகவிலைப்படி சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதை அரசாங்கம் நான்கு சதவீதம் அதிகரித்தால் அது மத்திய அரசு ஊழியர்களுக்கு 21 சதவீதமாக உயரும். இதனால் சம்பளமும் அதிகரிக்கும்.
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர். ஜூன் 2021 வரை கொரோனா காரணமாக அதிகரிப்பதை மோடி அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் ஹோலி முதல் ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.