Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 60 லட்சம் பணம் கேட்டு 3 வயது சிறுமி கடத்தல்.. பணிப்பெண் மற்றும் கள்ளக்காதலன் கைது..!!!

சென்னையில் 60லட்சம் பணம் கேட்டு 3 வயது சிறுமியை கடத்திய பணிப்பெண் மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் காவல் துறையினர்  கைது  செய்தனர்

சென்னை  அமைந்தகரை  பகுதியை  சேர்ந்த  நந்தினி , அருள்ராஜ்  தம்பதியினரின்  3 வயது  மகள்  அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். தம்பதியினர் பணிக்கு சென்று  வருவதால் சிறுமியை பராமரிப்பதற்கு   பணிப்பெண்ணாக  அம்பிகாவை   நியமித்துள்ளனர்  . இந்நிலையில் பணிப்பெண்  அம்பிகாவிடம்  சிறுமியை  விட்டுவிட்டு  நந்தினி  வீட்டில்  வேலை செய்து  கொண்டிருந்தார் சிறிது நேரம் கழித்து  வந்து  பார்த்தபோது சிறுமி  மற்றும்  அம்பிகா  இருவரையும் காணவில்லை என  உடனே  வீடு  முழுவதிலும்  மற்றும் அருகில் உள்ள பகுதிகளிலும்  தேடியுள்ளார் .

பின்னர் சிறிதுநேரத்தில் பணிப்பெண்  அம்பிகா  போனில் இருந்து  நந்தினிக்கு போன்  வந்துள்ளது .அதில் பேசிய  அம்பிகா  தன்னையும்  சிறுமி  அன்விகாவையும்   மர்மநபர்கள்  கடத்தி இருப்பதாகவும் எங்களை  காப்பாற்றும்  படியும்  கூறி  போனை  வைத்துள்ளார் . சிறிது  நேரத்தில்  அதே போனில்  இருந்து பேசிய மற்றொருவர இருவரையும்  உயிரோடு  விட வேண்டும் என்றால் ரூபாய்  60 லட்சம்  பணம்   தரும் படி கேட்டு  மிரட்டியுள்ளார்.

 

இதனால் பதறி போன சிறுமியின் பெற்றோர் அமைந்தகரை காவல்  நிலையத்தில்  புகார்  அளித்தனர்    .இதை  அடுத்து  புகாரின்  பெயரில் காவல்  துறையினர்  தீவிர தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டனர் .பின் பணிப்பெண் அம்பிகாவும் அவரது கள்ளக்காதலன்  கலிமுல்லா  இருவரும்   சிறுமியின்  கடத்தலில்  தொடர்புடையது  தெரிய  வந்தது .அதன்பிறகு  கைது  செய்து  விசாரணை  மேற்கொண்டதில்  பணத்திற்கு  ஆசை  பட்டு  கடத்தலில்  ஈடுபட்டது தெரியவந்தது . காவல் துறையினர்  சிறுமியை மீட்டு  பெற்றோரிடம்  ஒப்படைத்தனர் .நந்தினி , அருள்ராஜ்  தம்பதியினரின்  இருவரும் கண்ணிர் மல்க காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

 

Categories

Tech |