சந்தேகமான முறையில் பணப்பரிமாற்றம் நடந்தால் வங்கி அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, பரிசுப் பொருள்கள் விநியோகிப்பது, வெளிமாநிலங்களில் இருந்து பணம் எடுத்து செல்வதை சோதனை செய்வது போன்ற பணிகளில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வங்கியின் சேமிப்பு கணக்கிலிருந்து சந்தேகமான முறையில் பணப்பரிமாற்றம் ஏதாவது நடந்தால் வங்கிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வங்கி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவரை சார்ந்தவர்கள் அதிகமாக பண பரிவர்த்தனை செய்தாலும், வேட்பாளர்கள் கட்சி வங்கி கணக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பண பரிவர்த்தனை செய்தாலும் தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.