வைகோவின் மகன் சாத்தூர், கோவில்பட்டி தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகின்றது. மேலும் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் திமுக கூட்டணி சார்பாக உதயசூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர். இந்நிலையில் வைகோவின் மகன் துரை வையாபுரி சாத்தூர், கோவில்பட்டி தொகுதிகளில் போட்டியிட வைகோவிடம் வாய்ப்பு கேட்டு உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கும் மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது. மதிமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்த பின்னரே மீண்டும் வைகோவுடன் கட்சியினருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாராம் துரை வையாபுரி.பேச