ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் ரோஜா இளைஞர்களுடன் ஆடுகளத்தில் இறங்கி கபடி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆவார். இதையடுத்து சினிமாவில் கொடிகட்டி பறந்த ரோஜா கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் இறங்க ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது ஆந்திர மாநில நகரி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இதையடுத்து நகரி பகுதியில் ஒரு கபடி விளையாட்டு போட்டி நடந்துள்ளது.
இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக ரோஜா சென்றுள்ளார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் உற்சாகமடைந்த ரோஜா யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென களத்தில் இறங்கி அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் உடன் கபடி விளையாடி உள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் மிகவும் உற்சாகம் அடைந்து அவருக்கு கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.