Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“கதிர் ஆனந்த் வேட்புமனு பரிசீலனை நிறுத்தம்” கலக்கத்தில் திமுகவினர் …!!

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றதில் பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கில் வைத்துள்ளதாக புகாரில் சிக்கிய வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து திமுக , அதிமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத்தாக்கல் நேற்றோடு முடிவடைந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் உள்ளிட்ட  பலர்  வேட்பு மனுதாக்கல் செய்த நிலையில் அதன் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது பணப்பட்டுவாடா புகார் இருப்பதால், அவரது வேட்பு மனுவை ஏற்க கூடாது என்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து கதிர் ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |