Categories
சினிமா தமிழ் சினிமா

திறமைக்கு சம்பளம் தரப்படவில்லை…. புது அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி….!!

கோடியில் ஒருவன் திரைப்படத்தை எடிட்டிங் செய்த விஜய் ஆண்டனிக்கு சம்பளம் தரப்படவில்லை என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன், கொலைகாரன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இவர் தற்போது “கோடியில் ஒருவன்” படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் ஆண்டனி எடிட்டராக அவதாரம் எடுத்துள்ளார். ஆனால் படக்குழு அவருக்கு இதற்கான சம்பளத்தை தர மறுத்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது, “கோடியில் ஒருவன் திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி தான் எடிட்டிங் செய்துள்ளார்.

தற்போது முதல் பாதியை பார்த்து விட்டேன். இரண்டாம் பாதியை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். விஜய் ஆண்டனியின் இந்த திறமை மெய்சிலிர்க்க வைக்கிறது. இசையமைப்பாளரும், நடிகருமாக இருக்கும் விஜய் ஆண்டனி தற்போது எடிட்டிங்கிலும் தனது திறமையை காட்டியுள்ளார். இதற்காக அவருக்கு சம்பளம் கூட தரப்படவில்லை” என்று கூறினார்.

Categories

Tech |