Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து மக்களுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கீட்டில் இழுபறியும் நீடித்து வருகிறது. இந்நிலையில் அமமுக சட்டப்பேரவை தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாப்பிரெட்டியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், ராசிபுரத்தில் எஸ்.அன்பழகன், பாபநாசத்தில் எம்.ரங்கசாமி, சைதாப்பேட்டையில் செந்தமிழன், சோளிங்கரில் எல்.ஜி பார்த்திபன், வீரபாண்டியில் எஸ்.கே செல்வம், ஆரூரில் ஆர்.ஆர் முருகன், பொள்ளாச்சியில் கே. சுகுமார், ஸ்ரீரங்கத்தில் ஆர்.மனோகரன், மடத்துக்குளத்தில் சி.சண்முகவேலு, திருப்பத்தூரில் கே.கே உமாதேவன், உசிலையில் ஐ.மகேந்திரன், கோவை தெற்கு ஆர்.துரைசாமி, தர்மபுரியில் கே. ராஜேந்திரன், புவனகிரியில் கே.எஸ்.கே பாலமுருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Categories

Tech |