பிரேசிலில் மிகத்தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் உருமாறிய கொரோனா பி.1 மாறுபாட்டை ஃபைசர் தடுப்பூசி தடுக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பி .1 போன்ற கொரோனா வைரஸ் எதிராக ஃபைசர்/BioNTech தடுப்பூசிகளை செலுத்தப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் தொற்றை தடுக்கும் என்று ‘நியூ இங்கிலாந்து ஜேர்ணல் ஆஃப் மெடிசின் ‘தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் விஞ்ஞானிகள் பிரேசிலிய மாறுபாட்டிற்கு எதிராகவும் தடுப்பூசியின் செயல்திறன், 2020ல் தோன்றிய குறைந்த வீரியம் கொண்ட தொற்றுக்கு எதிராக செயல்பட்டது போல் தான் இருந்தது என்று கூறியுள்ளனர்.
இதனால் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றுகளையும் ஃபைசர் தடுப்பூசிகளால் தடுக்கமுடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.