Categories
அரசியல் மாநில செய்திகள்

10 கொடுத்தா போதும்…. 4க்கு மேல் முடியாது…. தேமுதிகவுக்கு செக் வைத்த திமுக…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து மக்களுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கீட்டில் இழுபறியும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தேமுதிக அதிமுகவுடன் தொகுதி பங்கீடுவதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அமமுக, மநீம கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து தேமுதிக தென் மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மூலம் திமுக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதிமுகவை தோற்கடிப்பது மட்டுமே தங்களுடைய குறிக்கோளாக கொண்டுள்ளதால் 10 தொகுதிகள் கொடுத்தாலும் பரவாயில்லை என்று தேமுதிக கேட்க, 4 தொகுதிகளுக்கு மேல் கொடுக்கமுடியாது என்று திமுக செக் வைத்துள்ளதாம்.

Categories

Tech |