Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செய்யாறு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், குறைபாடுகளும்…!!!

செய்யாறு செய் அழைத்த ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில், குடைவரை கோவில், மாமண்டூர் ஏரி இந்த தொகுதியின் முக்கிய அடையாளங்கள் ஆகும். செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர் முக்கிய ஊர்களாகும். செய்யாறு தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பி இருக்கிறது. ஆரணியை போல செய்யறிலும் பட்டு நெசவு செய்யும் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். 50,000 தொழிலாளர்கள் பணிபுரியும் சிப்காட் தொழிற்சாலை இந்த தொகுதியில் அமைந்துள்ளது.

செய்யாறில் கடந்த 1952 இல் இருந்து நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல்களில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றனர், கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் தூசி மோகன் போட்டியிட்டு வென்றார். செய்யாறில் மொத்தம் 2,54,535 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியிலும் பெண் வாக்காளர்கலே அதிகம். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 120 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதால் செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள நகரி, திண்டிவனம் ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கையாகும்.அப்போதைய முதலமைச்சர் அறிவிக்கப்பட்ட செய்யாறு புதிய மாவட்டம் உள்ளிட்ட நிறைவேற்றப்படாத கோரிக்கைகளும் இனிவரும் காலங்களில் நிறைவேற்றப்படும் என சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் உறுதி கூறுகிறார்.

வேளாண் பொருட்களை சேமிக்க கிடங்கு வசதி, உரிய விலைக்கு வேளாண்பொருட்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை, செய்யாரின் குறுக்கே தடுப்பணைகள் அமைப்பது, ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம், மற்ற ஊர்களுக்கு உரிய போக்குவரத்து வசதி என கோரிக்கைகளை மக்கள் பட்டியலிடுகின்றனர். நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறுமா என தொகுதி மக்கள் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Categories

Tech |