Categories
தேசிய செய்திகள்

பழச குடுத்துட்டு… புதுசு வாங்குனா… 5% தள்ளுபடி… மத்திய அரசு அதிரடி..!!

பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்க வருபவருக்கு 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனங்களும், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக ரீதியிலான பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களையும் நீக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.  இதனால் மக்கள் மத்தியில் செயல்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பழைய வாகனங்களை தானாகவே வந்து அழிக்க முன்வரும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வாகனத்தில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் 4.5 லட்சம் கோடியில் இருந்து பத்து லட்சம் கோடி உயர்வு வரும் என்று அவர் தெரிவித்தார். வாகனத் துறையில் 10 கோடிக்கு மேல் முதலீடும், 50,000 அளவில் வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |