தமிழகத்தில் சசிகலாவை நேரில் சந்தித்து பேசியது குறித்து சீமான் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி வெளியாகியுள்ளது.
சிறை தண்டனை முடிந்து தமிழகத்திற்கு வந்த சசிகலாவை சரத்குமார், பாரதிராஜா மற்றும் சீமான் போன்றவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து சரத்குமாரும், பாரதிராஜாவும் செய்தி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிரபல தமிழ் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சீமானிடம் இச்சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அந்த கேள்விகள் குறித்து அவர் கூறியதாவது “சசிகலா அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்புகின்றார், ஆனால் அது சரியாக நடக்கவில்லை என்று வேதனைப்பட்டு கொண்டிருக்கின்றார். நான் வேணும்னா எடப்பாடியாரை சந்தித்துப் பேசி பார்க்கவா என்று கேட்டேன், அதற்கு அவர் ஓகே சொன்னார், ஆனால் நான் இன்னும் எடப்படியாரை போய் சந்தித்து பேசவில்லை.
இந்நிலையில் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்க முடிவெடுத்து இருப்பதாக அறிந்தேன், ஆனால் எனக்கு அவர் எடுத்த முடிவின் மேல் துளியும் விருப்பம் இல்லை. இதனையடுத்து நான் அவரை திரும்ப சந்தித்து ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள் என்று கேட்கனும், ஆனால் அவரை ஒரு முறை சந்தித்தது பேசியத்துக்கே நீங்கள் இவளோ கேள்விகள் கேட்பதால் தேர்தல் முடியட்டும் அப்புறம் போய் பேசிக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்” என்று பாதிலளித்துள்ளார்.
https://twitter.com/i/status/1369335654635745289