Categories
உலக செய்திகள்

சுவிஸ் தேர்தலில் வெற்றி…..! கலக்கிய தமிழ் பெண்…. முதல் பெண்ணாக சாதனை …!!

தமிழர்கள் 4 பேர் ஸ்விட்ஸர்லாந்தில் மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற மாநிலசபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். 

மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற சுவிட்சர்லாந்து சொலத்தூண் மாநிலசபைத் தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் வெவ்வேறு பிரதேசங்களில் போட்டியிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கடுமையாக மக்கள் பணி செய்ததால் போட்டியிட்ட பிற தலைவர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறியதாக கூறப்படுகின்றது. மேலும் அவர்கள் சோஷலிச ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டனர்.

இதில் பராஹ் ருமி  என்ற தமிழ் பெண் சொலத்தூண்-லெபெர்ன் பிரதேசத்தில் 3522 வாக்குகளைப் பெற்று சுவிட்சர்லாந்து மாநில சபையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும்  தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Categories

Tech |