தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக ஆளும் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி என்பவர் இளம் பெண் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்கள் மற்றும் அம்மாநில ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இளம்பெண்ணுடன் வெளியான ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று கர்நாடக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிகோலி தெரிவித்துள்ளார். என்னை அமைச்சர் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்பதற்காக 100 கோடி செலவு செய்து இந்த வீடியோவை தயாரித்து வெளியிட்டு உள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் நூறு சதவீதம் போலி இதற்கு காரணமானவர்களை நான் விட போவதில்லை என்று கூறியுள்ளார்.