கோவை மாவட்டம் ஒட்டுமொத்தமாக அதிமுகவின் கோட்டை என்று சொல்லக்கூடிய அளவிற்கு 10 சட்டமன்ற தொகுதிகளில் 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வசம் இருக்கின்றது. தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினராக அம்மன் அர்ஜுனன் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த தொகுதியை பாஜகவுக்கு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இந்தப் போராட்டமானது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிமுகவினர் மொத்தமாக தற்போது இந்த அலுவலகம் முன்பு இந்த போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால் நாங்க எல்லோருமே பொறுப்புகளை கூண்டோடு ராஜினாமா செய்ய இருப்பதாகவும், கையெழுத்து போட்டு தயாராக வைத்துள்ளோம் என கூறினார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.