குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் நடிகை சகிலாவின் மகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது 2வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நடிகை சகிலா ,பாபா பாஸ்கர் மாஸ்டர், அஸ்வின், கனி ,பவித்ரா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக் கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய போராடும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சகிலாவின் இமேஜ் முற்றிலுமாக மாறிவிட்டது.
தற்போது அவரை அனைவரும் ஷகிலா அம்மா என அன்புடன் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சகிலா அவரது மகளுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் . நடிகை சகிலா ஒரு திருநங்கையை மகளாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது மகளுடன் சகிலா கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினும் கலந்து கொண்டுள்ளார். அப்போது சகிலாவின் மகளும் அஸ்வினும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.