பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணி தீவிரமாகப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை எடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 2285 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 ஆயிரத்து 261 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2286 ஆக உயர்வடைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இரண்டு பேரும், கோவை தனியார் மருத்துவமனையில் ஒருவரும், அரியலூர் அரசு மருத்துவமனையில் ஒருவரும் மொத்தம் நான்கு பேர் கொரோனா தொற்றிற்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.