சிவகங்கையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நீதிபதி தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப் பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட நீதிபதி ஆ.சுமதி சாய்பிரியா தலைமை தாங்கியுள்ளார். இதில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவமணி வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவில் மாவட்ட நீதிபதி பெண்கள் தங்களுடைய மன வலிமையை வெளிப்படுத்துவதன் மூலம் நினைத்த பதவியை அடையலாம் என்று கூறியுள்ளார். மேலும் மனவுறுதியை பயன்படுத்த வேண்டுமென்றும், பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் உயர்ந்த நோக்கத்துடன் கல்வியை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நமக்கு தேவை விவேகம், வேகம், விழிப்புணர்வு, நம்மை நான்தான் காத்துக் கொள்ளவேண்டும் என்றும் பெண்கள் மத்தியில் விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட நீதிபதி பரிசுகளை வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி யூ.மு.பாபுலால், சார்பு நீதிபதி முருகன் ஆகிய பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் முதுநிலை தமிழாசிரியரான முனிஸ்வரி நன்றியுரை ஆற்றியுள்ளார்.