அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை என்று ஜெஜெ பிரெட்ரிக் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான அந்தாதூன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் தமிழில் “அந்தகன்” என ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தை இயக்க இயக்குனர் மோகன்ராஜ் ஒப்பந்தமாகியிருந்தார்.
ஆனால் அவர் தெலுங்கு படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்திலிருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஜேஜே ஜெஜெ பிரெட்ரிக் இப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை என்று ஜெஜெ பிரெட்ரிக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை. படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். அனைவருடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. எனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்” என்று கூறியுள்ளார்.
Dear All 🤗
This is to inform you all that, I’m not directing the film #Andhagan & Goodluck to the Team 💐
Thank you all for the support and love & Will keep you posted about my next project very soon 🙂
— Jj Fredrick (@fredrickjj) March 10, 2021