Categories
உலக செய்திகள்

பிரேசிலில் வேகமெடுக்கும் கொரோனா… 4வது முறையாக மாற்றப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர்… என்ன காரணம்?…!!!

பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடங்கிய பிறகு நான்காவது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பு ஊசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.இதற்கு மத்தியில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பிரேசிலில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது . அதனால்  அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனேரோ வைரஸ்க்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துவருகிறார் . மேலும்  கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க  தொடங்கியுள்ளதால் , அந்நாட்டின் சுகாதார அமைச்சர் 4வது முறையாக மாற்றம் செய்யாப்பட்டுள்ளார். அதன்படி பிரேசில் நாட்டில் மார்செலோ குவரோக என்பர்  புதிய சுகாதார அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

Categories

Tech |