செட்டிநாடு என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கரைக்குடி. தமிழர்கள் கட்டிட கலையை உலகறிய செய்யும் காலை நயமிக்க நகரத்தார் பங்களாக்கள் உலகிலேயே தாய் மொழிக்காக கம்பன் கழகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ் தாய் கோவில் ஆகியவை இந்த தொகுதியின் சிறப்பு அம்சங்கள். சுதந்திரத்திற்கு பின்னர் 1952லிருந்து 15 சட்ட மன்ற தேர்தல்களை எதிர் கொண்டுள்ள காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ்,அதிமுக தலா 4 முறையும், திமுக 3 முறையும், சுதந்திரா கட்சி 2 முறையும், தமிழில் மாநில காங்கிரஸ், பாஜக தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2016 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற கே.ஆர்.ராமசாமி தற்போதைய எம்.எல்.எ வாக உள்ளார். பெண் வாக்காளர்களை அதிகம் கொண்ட காரைக்குடியில் ஒட்டு மொத்தமாக 3,09,795 வாக்காளர்கள் உள்ளனர். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய காரைக்குடியை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட கால கோரிக்கை. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருப்பதால் தொழிற் பேட்டைகளை உருவாக்கி இளைனர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
பாதாள சாக்கடை திட்டம் 5 ஆண்டுகளாக ஆமை போல் நடைபெறுவதால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. தேர்தல் வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை எம்.எல்.ஏ தொகுதி பக்கமே வருவதில்லை என்பது வாக்களித்த மக்களின் குமுறலாகவே உள்ளது. சட்ட சபையிலே ஆளுங்கட்சி குறைகளை சுட்டிக்காட்டுவதால் தமது தொகுதியை தமிழக அரசு புறக்கணித்துவிட்டது என எம்.எல்.ஏ. ராமசாமியின் விளக்கம். விளையாட்டு மைதானம், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். மிகப்பெரிய ஊராட்சியாக உள்ள சங்கராபுரத்தை காரைக்குடி நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்பதும் நீண்ட கால கோரிக்கைகளாகும்.