Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை அப்டேட் மக்களே”…. வைரலாகும் திருப்பூர் கலெக்டர் ட்விட்…!!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை அப்டேட் மக்களே என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல முன்னணி நடிகராக திகழும் அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான அப்டேட்டை படக்குழு வெளியிட வேண்டும் ரசிகர்கள் பல நாட்களாக கேட்டு வருகின்றனர். ஆனால் வலிமை படக்குழு இதுவரை எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டரான விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வலிமை அப்டேட் மக்களே” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதை ஒரு அப்டேட்டாக எடுத்துக் கொண்டு நேர்மையான முறையில் ஓட்டு போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |