Categories
தேசிய செய்திகள்

பீகாரில் கொடூரம் ”கால்நடை திருடர்கள்” சந்தேகத்தின் பெயரில் அடித்துக் கொலை…..!!

கால்நடைகளை திருட முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் மூன்று பேரை அடித்துக் கொன்ற சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின்  சரண் மாவட்டத்தில் உள்ள பைகம்பர்பூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை வீடுகளில் உள்ள கால்நடைகளை திருட முயன்றதாக கூறப்படுகின்றது. இதையடுத்து சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் அந்த மூன்று பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

பீகாரில் கால்நடைகள் திருட முயற்சி சந்தேகத்தின் பேரில் 3 பேர் அடித்துக்கொலை

ஊர் மக்களில் கொடூரமான தாக்குதலில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த  சம்பவ இடத்துக்கு வந்த பனியாபூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் , பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |