Categories
சினிமா தமிழ் சினிமா

சாயீஷாவுடன் திருமணத்தை நிறுத்தி விடுகிறேன்.. ஆர்யா அனுப்பிய மெசேஜ்.. ஆதாரத்தை வெளியிட்ட இலங்கை பெண்..!!

நடிகர் ஆர்யா தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் அளித்த இலங்கை பெண் அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். 

நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, கலாபக் காதலன், பட்டியல், அவன் இவன், நான் கடவுள் உட்பட பல படங்களில் நடித்துள்ள இவருக்கு கடந்த வருடத்தில் நடிகை சாயிஷா உடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த விட்ஜா என்ற தமிழ் பெண், நடிகர் ஆர்யா தன்னை காதலித்து ஏமாற்றியதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். இவர் தன் புகாரில் பிரபல நடிகர் ஆர்யா என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி சுமார் 70,40,000 ரூபாய் வாங்கியதாக கூறியுள்ளார்.

அதன்பின்பு தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதோடு, தான் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை என்று இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக புகார் தெரிவித்துள்ளார். இப்புகார் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் ஆர்யா தன் மீது அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்குமாறு தன்னை மிரட்டியதாக அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை விட்ஜா வெளியிட்டிருக்கிறார். மேலும் இதற்கு முன்பு எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் ஆர்யா கலந்துகொண்ட போதும் இருவரும் செய்த சேட்டிங்களை அந்தப்பெண் வெளியிட்டுள்ளார்.

அதில் அந்தப் பெண் ஆர்யாவிடம் பிரபல ஹீரோவாக உள்ள நீ, என்னிடம் எதற்காக பிச்சை கேட்கிறாய்? உன்னுடன் பணியாற்றுபவர்கள் உன்னை பிச்சைக்காரனாக நினைக்கிறார்களோ? இல்லையோ நான் அப்படித்தான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஆர்யா எனக்கு கடன் சுமை அதிகம் இருப்பதால் தான் இந்த நிகழ்ச்சியில் நடிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இதே போன்று என்னை திருமணம் செய்கிறேன் என்று கூறி ஏமாற்றிவிட்டு சாயிஷாவை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு ஆர்யா அது என் அப்பாவின்  முடிவு என்று கூறி நழுவியுள்ளார். மேலும் என் கடன் முழுவதையும் அடைக்க தேவைப்படும் பணத்தை நீ தந்தால், சாய்ஷா உடனான திருமணத்தை நிறுத்தி விடுகிறேன் என்று ஆர்யா அனுப்பிய சாட்டிங் வெளியாகியுள்ளது.

Categories

Tech |