Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்பு…! கோரிக்கைகள்…!

சங்க காலத்தில் தகடூர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தருமபுரி 1965ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தாலும் 1951 முதலே சட்ட மன்ற தொகுதியாக உள்ளது. தருமபுரி தொகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. ஆண்டுக்காண்டு பருவ மழை குறைவு உள்ளிட்டு பல்வேறு காரணங்களால் விவசாயமும் குறைந்து கொண்டு வருவதால் பெரும்பாலோனோர் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு, அண்டை மாநிலங்களுக்கும் செல்லும் நிலை நீடிக்கிறது. 1951 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தருமபுரி சட்ட மன்ற தொகுதியில் திமுக 6 முறையும்,காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி தலா 2 முறையும் வென்றன.

சுயேட்சையில் வேட்பாளர்கள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக, ஜனதா கட்சி, தேதிமுக கட்சிகளும் தலா 1 முறை வென்றுள்ளார். 2016ல் திமுக சார்பில் வெற்றி பெற்ற தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ வாக உள்ளார். தருமபுரி தொகுதியில் மொத்தம் 2,62,366 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் ஆண் வாக்காளர்களே அதிகம்.தருமபுரி மாவட்டத்தில் விவசாயத்தை தவிர முக்கிய வேலை வாய்ப்புகள் இல்லை. காவிரி ஆறு தருமபூரி மாவட்டத்தின் வழியாக சென்றாலும் விவசாய பயன்பாட்டிற்கு காவிரி நீரை பயன்படுத்த முடியவில்லை.

காவிரி உபரி நீரை கொண்டு ஏரி குளங்களை நிரம்ப வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. பொம்மிடி இணைப்பு சாலை, புதிய பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொகுதி மக்களின் கோரிக்கை நீண்ட நெடியது. தருமபுரி தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக உள்ள திமுக வை சேர்ந்த தடங்கம் சுப்பிரமணி எதிர்கட்சியாக இருந்தாலும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று சாலை குடிநீர், தெருவிளக்கு, கால்வாய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாக பட்டியலிடுகிறார்.

அதே நேரத்தில் குடிநீர் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படவில்லை வேலைவாய்ப்பு, சாலைவசதி, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, நகர விரிவாக்கம், நிலத்தடி நீரை மேம்படுத்த நீர்நிலைகள் பராமரிப்பு போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே  இருந்து வருகிறது என பட்டியலிடுகின்றனர் வாக்காளர்கள். அறிவிப்பாகவே இருந்து வரும் சிப்காட் பணிகளை விரைந்து துவங்க வேண்டும், புதிய பேருந்து நிலைய பணிகளை விறைத்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை பட்டியல் நீள்கிறது.

Categories

Tech |