Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சு அசல் விஜய் மாதிரியே ஆடிய சிறுமி… ஒரு ஸ்டெப் கூட மாறவில்லை… அசத்தல் வீடியோ…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு சிறுமி அப்படியே நடனமாடும் காட்சி வைரலாகி வருகிறது.

தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சமீபத்தில் விஜய் நடிப்பில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இப்படத்தில பாடல்கள் அனைத்தும் அனிருத்தின் இசையில் உருவாகி பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கப்பட்டது. மேலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த” வாத்தி கம்மிங்” என்ற பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. இப்பாடலுக்கு சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் பிரபலங்கள் என அனைவரும் நடனமாடி அவர்களின் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் .

கிரிக்கெட் வீரர்களான அஸ்வின் சுரேஷ் ரெய்னா ஹர்பஜன் சிங் ஹர்திக் பாண்டியா குல்தீப் யாதவ் போன்றவர்கள் மற்றும்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இப்பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோக்கள் சமூக  வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது மேலும் அனைவருக்கும் பிடித்த நஸ்ரியா போன்ற பல சினிமா நடிகர்களும் இப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளனர் . இதனைத் தொடர்ந்து அப்பாடலுக்கு விஜய் ஆடும் அனைத்து அசைவுகளுடனும்  முகபாவனைகளுடனும் எந்த ஒரு சிறு தவறும் இல்லாமல் அதேபோல் ஆடி ஒரு சிறுமி அசத்தியுள்ளார்.

அச்சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி விஜய் ரசிகர்கள் இடத்திலும் நெட்டிசன்கள் இடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் ரிலீஸாகி  பல நாட்களை கடந்தும் வாத்தி கம்மிங் பாடலின் ஆர்வம் ரசிகர்களிடத்தில் சிறிதளவும் குறையவில்லை என்று நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளன.

https://twitter.com/Vinisayzz/status/1368788075086704647

Categories

Tech |