Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரீமேக் செய்யப்படும் தேசிய விருது படம்…. சிறப்பு பூஜையுடன் தொடக்கம்…!!

ரீமேக் செய்யப்படும் “அந்தகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

பாலிவுட்டில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “அந்தாதூன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சிறந்த ஹிந்தி படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றிற்கான தேசிய விருதையும் பெற்றது.

இதைத் தொடர்ந்து இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் பிரபல நடிகை சிம்ரனும் நடிக்க உள்ளார். இந்நிலையில் “அந்தகன்”என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.

Categories

Tech |