Categories
உலக செய்திகள்

காலில் அடி பட்டிருச்சி…. மருந்து கடைக்காரரிடம்… செய்கையால் உணர்த்திய நாய்…. வைரலாகும் வீடியோ…!!

துருக்கி நாட்டில் வசிக்கும் செங்கிஸ் என்பவர் மெடிக்கல் நடத்தி வருகிறார். விலங்கினத்தின் ஆர்வலரான இவர் நாய்களின் மீது பிரியம் கொண்டவர். இவர் நாய்களுக்கென்று தன்னுடைய மருந்துக்கடையில் ஒரு பகுதியை படுக்கைக்கு வசதியாக அமைத்துக் கொடுத்திருக்கிறார். சம்பவத்தன்று இவருடைய கடைக்கு நாய் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து சாப்பாடு வைத்தபோது நாய் அதை சாப்பிடாமல் அவரைப் பார்த்து தன்னுடைய காலை நீட்டி உள்ளது.

அப்போது தான் நாயின் காலில் அடிபட்டு ரத்தம் வந்துகொண்டிருப்பதை அவர் பார்த்துள்ளார். இந்நிலையில் நாய் தன்னுடைய காலில் அடிபட்டதால் மருந்து போட சொல்லுமாறு உணர்த்தியதை அவர் மருந்து எடுத்துக்கொண்டு நாய்க்கு போட்டுள்ளார். மருந்து போட்ட பின்பு நாய் அங்கேயே படுத்து உறங்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |