Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“புதையல் கிடைக்கும்” 3 பிள்ளைகளையும் இப்படி பண்ணிரலாம்…. பெற்றோர்களின் திட்டம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

புதையல் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் ஜெயந்தி- தேவேந்திரன். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயந்தி தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளையும் வரும் 13ம் தேதியன்று நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்ததால், தன்னுடைய மூன்று மகள்களையும் பூஜைக்கு கட்டாயப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்ததால் விரைந்து வந்த பாதுகாப்பு மையத்தினர் காவல்துறையினரின் உதவியுடன் ஜெயந்தி வீட்டிற்கு வந்து இந்த மூன்று குழந்தைகளையும் மீட்டு உள்ளனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஜெயந்தி கூறுகையில், தன்னுடைய தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று குறிசொல்லி வந்தேன். கால்நடைகளை பலி கொடுத்து பூஜை செய்தேன். தற்போது எனக்கு புதையல் கிடைக்க வேண்டும் என்று தன்னுடைய பிள்ளைகளை வைத்து பூஜை செய்து நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு உறுதுணையாக கணவர் இருந்ததாகவும் கூறியதால் இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுபோன்ற மூடநம்பிக்கைகள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொலை செய்யும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

Categories

Tech |