தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கிடுவதில் இழுபறியும், கூட்டணி குறித்த குழப்பமும் நீட்டித்து வருகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக அதிருப்தி அடைந்ததால் அதிமுகவில் இருந்து விலகியது. இதையடுத்து திமுக, மநீம கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போவதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் இனி எந்த காலத்திலும் அதிமுகவோடு கூட்டணி வைக்க மாட்டோம். அதிமுகவுடன் கூட்டணி வைத்த பத்து ஆண்டுகள் அதிமுகவை நாங்கள் வாழ வைத்தோம். இனி நாங்கள் நன்றாகவே வாழ்வோம் என்று அவர் கூறியுள்ளார்.