தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கிடுவதில் இழுபறியும், கூட்டணி குறித்த குழப்பமும் நீட்டித்து வருகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் வெளியாகியுள்ளது. விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கோவை தெற்கு, உதகை, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, திட்டக்குடி, திருக்கோவிலூர், ஆயிரம்விளக்கு, திருவையாறு, தாராபுரம், காரைக்குடி, திருவண்ணாமலை, அரவக்குறிச்சி, தளி.