Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலக்கோடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்பு என்ன ?

பாலக்கோடு என்றதும் சட்டென அனைவர்க்கும் நினைவுக்கு வருவது பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை  தக்காளி அங்காடி பால்வண்ணநாதர் ஆலயம் ஆகும். விவசாயத்தை தவிர பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை தரக்கூடிய தொழில் நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில் வைப்புகளோ எதுவுமே கொண்டு வரைபடாத வளர்ச்சி பெறாத தொகுதியாகவே தற்போது வரை இருந்து வருகிறது பாலக்கோடு சட்ட மன்ற தொகுதி.

கடந்த 1967 முதல் இதுவரை நடைபெற்ற சட்ட மன்ற தேர்தல்களில் அதிமுக 8 முறையும், திமுக காங்கிரஸ் 2 முறையும் வென்றுள்ளனர். பாலக்கோடு தொகுதியில் மொத்தம் 2,30,183 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்களே அதிகம். ஒருகாலத்தில் பாலக்கோடு தொகுதியில் பரவலாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் பருவமழை தவறியது தண்ணீர் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் தொடர் பாதிப்புகளை விவசாயிகள் சந்தித்ததால் கரும்பு சாகுபடி வரவு நாளுக்கு நாள் குறைந்து வந்தது.

தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வுகாண படாததால் சொந்த ஊரில் பிழக்க முடியாமல் விவசாயிகள் கூழி தொழிலாளர்கள், படித்த இளைஞர் பிழைப்பு தேடி பெங்களூருக்கு செல்லும் நிலை தற்போது வரை தொடர்கிறது. தென்பெண்ணை ஆற்று நீரை என்ணெகொல்புதூர் வழியாக தோல்செட்டி ஏறி, தும்பரஅல்லி ஏறி உள்ளிட்ட நீர் நிலைகளை நிரப்பும் திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். நான்கு முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தும் அமைச்சர் பதவி கிடைத்தும் கூட கே.பி.அன்பழகன் தொகுதி வளர்ச்சிக்கு உரிய திட்டங்களை செய்யவில்லை என்பது மக்களின் புகராகும்.

ஆனால் குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டிருப்பதாக கே.பி.அன்பழகன் பட்டியலிட்டுள்ளார். வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் தொழில் நிறுவனங்களை பாலக்கோடு தொகுதியில் அமைக்க வேண்டும். அதிகம் விளையும் தக்காளி மலர்களை பாதுகாக்க குளிர்பதன சேமிப்பு கிடங்கு, வாசனை திரவிய ஆலை அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கையாகும். சாலை, போக்குவரத்து, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற படுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் தொகுதியை மக்கள்.

Categories

Tech |