Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… இயக்குனர் செல்வராகவனின் மூன்றாவது குழந்தை… அவரின் மனைவி வெளியிட்ட புகைப்படம் இதோ…!!!

இயக்குனர் செல்வராகவனின் மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை அவரது மனைவி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். கடந்த மார்ச் 5ஆம் தேதி இவர் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப்பின் செல்வராகவன் படம் வெளியாவதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் செல்வராகவனின் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனின் மூன்றாவது குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருக்கு ஆண்குழந்தை பிறந்ததாக தகவல்கள் வெளியானது.  தற்போது செல்வராகவன் அவரது மூன்றாவது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரது மனைவி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது  இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |