இமாச்சல பிரதேசத்தில் சமோசாவுக்கு காசு கேட்ட கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேசம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவரும் கேக், மிட்டாய் விற்பனை செய்துவரும் கடையை நடத்தி வருகின்றனர். கடைக்கு சமோசா வாங்க வந்த இருவர், விலை அதிகமாக உள்ளது என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கடை உரிமையாளரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் மூத்த சகோதரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.