பெங்களூருவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை அப்பகுதி இளைஞர்கள் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மாநிலம் மாண்டியா யச்செனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு பகுதியில் திடீரென்று சிறுத்தை ஊருக்குள் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் எந்தவித பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் புலியை பிடித்த சம்பவம் அரங்கேறியது. சிறுத்தையை கயிறால் கட்டி இளைஞர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இவர்களின் தைரியத்தை பார்த்த ஊர்மக்கள் பாராட்டினாலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.