டெல்லி காவல்துறை பெண் அதிகாரி பற்றிய வெப்சீரிஸ் ஒன்று உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி சமயபூர் பத்லி காவல் நிலையத்தில் சீமா தாகா என்ற பெண் தலைமைக் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் இருந்து நேரடியாக தேர்வாகி நேர்காணலின் மூலம் போலீஸ் வேலையில் சேர்ந்த ஒரே நபர் சீமா தாகா என்ற பெண் என்பது குறிப்பிடத்தக்கது. சீமா தனது 20 வயதில் இருந்து காவல் துறையில் பணியாற்றி வருகிறார். சீமாவின் கணவரும் காவல்துறை அதிகாரியாக தான் உள்ளார்.
இந்நிலையில் கடந்த வருடம் காணாமல் போன 76 குழந்தைகளை 3 மாதத்திற்குள் கடுமையான முயற்சிக்குப் பிறகு குழந்தைகள் அனைவரையும் மீட்டுள்ளார்.இவற்றில் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் 54 பேர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது . டெல்லியில் மட்டும் இல்லாமல் பஞ்சாப் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் காணாமல்போன பல குழந்தைகளை தன் திறமையின் மூலம் மீட்டு கொடுத்துள்ளார்.
மேலும் சீமாவின் சாதனையை பாராட்டி அதிகாரிகள் சினிமாவிற்காக வெப் சீரியஸ் ஒன்றை உருவாக்குவது தெரிவித்துள்ளனர்.இதனை அறிந்த பாலிவுட் வர்த்தக நிறுவனர் கோமல் நாதா 3 மாதங்களில் காணாமல்போன 76 குழந்தைகளை மீட்டுக் கொடுத்த சீமாவிற்கு பதவி உயர்வுக்கான அவரது முறை வராத போதிலும் பதவி உயர்வு பெற்ற முதல் டெல்லி காவல்துறை அதிகாரியை உருவாக்கிய அவரது கதைக்காக உரிமைகளை அப்சலியூட் பீனஜ் என்டர்டைன்மென்ட் நிறுவனமே பெறுவதாகவும் பதிவிட்டுள்ளார்.