அமெரிக்காவில் 12 மாகாண அரசுகள் ஜோ பைடன் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் நகரில் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015 ஆம் ஆண்டு கையெழுத்திட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியின் போது இந்த பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா முதல் நாடாக இணைந்துள்ளது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த டிரம்ப் கடந்த 2017ஆம் ஆண்டு பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளே பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கூறி ஜோ பைடன் நிர்வாகத்தின் மீது 12 மாகாண அரசுகள் வழக்கு தொடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.