Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடகு கடையில் கொள்ளை முயற்சி…! மதுரையில் பெரும் பரபரப்பு …!!

மதுரையில் மர்பநபர்கள் அடகுகடையில் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மணப்புரம் நகை அடகு கடையில் அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்கள். சம்பவத்தன்று காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது பூட்டிய வங்கியிலிருந்து அலாரம் ஒலிப்பதை கவனித்து, வங்கியின் மேலாளர் கருப்பசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இந்நிலையில் கருப்பசாமி வந்து வங்கியின் கதவை திறந்தவுடன் உள்ளே சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் வங்கியின் பின்புற ஜன்னல் கம்பியை ஆக்சா பிளேடால் அறுத்து லாக்கரை திறக்க முயற்சித்த நிலையில், லாக்கரின் அடியிலிருந்த சென்சார் அலாரம் ஒலித்ததால் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்கள். இதனால் லாக்கரிலிருந்த 41/2 கோடி மதிப்பிலான தங்க நகையும் எட்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் தப்பியது தெரியவந்துள்ளது . இச்சம்பவத்தினை வழக்கு பதிவு செய்த காவலர்கள் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |