Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆம்னி பஸ் ஏற்படுத்திய விபத்து… பலியான விவசாயி … சோகம் …!!!

வாசுதேவநல்லூர் பகுதியில் ஆம்னி பேருந்து மோதியதில் ,மொபட்டில் சென்ற விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .

தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் காலனியை சேர்ந்த 50 வயதுடைய பால்சாமி விவசாய தொழில் செய்து வந்தார். சம்பவ தினத்தன்று பால்சாமி தனது மொபட்டை எடுத்துக்கொண்டு  வாசுதேவநல்லூரில் உள்ள கடை வீதிக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தென்காசி- மதுரை சாலை வழியாக வந்தார் . அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று  இவரின் மொபட்டின்  மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பால்சாமியை ,அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வாசுதேவநல்லூர் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ,விபத்து ஏற்படுத்திய ஆம்னி பேருந்தை ஓட்டி வந்த  25 வயதுடைய ஷேக் மதார் மைதீனை   கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |