சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு கட்டாயம் அசைவ உணவுகள்தான் வழங்கப்பட வேண்டும் என்று லோக்கல் சட்டதிட்டங்கள் இருக்கின்றன. ஆனால் சீனாவின் செங்டு நகரில் உள்ள கிண்டர் கார்டன் என்ற பள்ளியில் லோக்கல் சட்டத்தை மீறி குழந்தைகளுக்கு சைவ உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் குழந்தைகள் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என்று புகார் அளித்துள்ளனர்.
இபொதுவாக ந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பால், முட்டை போன்ற உணவுகள் வழங்கிவந்த பள்ளி நிர்வாகம் மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகளை வழங்காமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து குழந்தைகளுக்கு உணவில் சைவம் அசைவம் என இரண்டுமே கலந்து உணவுகளை கட்டாயம் வழங்க வேண்டும் என்றும், கட்டாயம் அசைவ உணவு வழங்கப்பட வேண்டும் என சீன கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.