Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்… மாசி பங்குனி திருவிழா… கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

காரைக்குடியில் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி, மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி, மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியுள்ளது. இந்த கோவிலில் திருவிழா ஒரு மாதத்திற்கு மேலாக நடப்பதால் பக்தர்கள் எங்கு இருந்தாலும் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்துவிடுவார்கள். இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அலங்கார பூஜைகள், சிறப்பு அபிஷேகம், அதன்பின் கொடிமர பூஜை ஆகியவை நடைபெற்றுள்ளது.

இதையடுத்து காலை 6 மணி அளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்று கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதன்பின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு காப்புக்கட்டி கொண்டுள்ளனர். இந்த திருவிழா ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெறுவதால் தீமிதித்தல், பால்குடம், காவடி எடுத்தல், முளைப்பாரி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும். கோவில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து கொண்டு அம்மனுக்கு விரதம் இருப்பார்கள். அப்போது கோவிலே மஞ்சள் மயமாக காட்சியளிக்கும். விழாவை முன்னிட்டு தினமும் இன்னிசை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

Categories

Tech |