சிவகங்கையிலிருந்து 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தாலுகா அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குபதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்களிக்கும் விவரம் குறித்த கருவி ஆகியவை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை தொகுதிவாரியாக அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையிலும் அனுப்பி வைக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
மேலும் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 492 வாக்குப்பதிவு எந்திரங்களும், 492 கட்டுப்பாட்டு கருவிகளும், 533 வாக்கு அளிக்கும் விவரம் குறித்த கருவிகள் என 1517 எந்திரங்களும், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 532 வாக்குப்பதிவு எந்திரங்களும் 532 கட்டுப்பாட்டு கருவிகளும் 576 வாக்களிக்கும் விவரம் குறித்த கருவிகளும் என 1640 எந்திரங்களும், மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு 479 வாக்குப்பதிவு எந்திரங்களும், 479 கட்டுப்பாட்டு கருவிகளும், 519 வாக்களிக்கும் விவரம் குறித்த கருவிகளும் என 1477 எந்திரங்களும், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு 513வாக்குப்பதிவு எந்திரங்களும், 513 கட்டுப்பாட்டு கருவிகளும், 556 வாக்களிக்கும் விவரம் குறித்த கருவிகள் என 1582 இயந்திரங்களும் மொத்தம் 6216 மின்னணு இயந்திரங்கள் தொகுதிவாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு காவல்துறையின் முழு கண்காணிப்பில் இருக்கும். மேலும் பாதுகாப்பான அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்காணிக்கப்படும். இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்கை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கழுவன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், மானாமதுரை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி, ஆட்சியர் கந்தசாமி, துணை ஆட்சியர் பயிற்சி கீர்த்தனா, மாணிக்கவாசகம், தர்மலிங்கம், ரத்தினவேல் பாண்டியன், ஆனந்த் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.